சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் :ராமநாதபுரம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மணல் அள்ளியவர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏந்தல்கரையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 65, இவர் அப்பகுதியில் உள்ள ஆற்று பகுதியில், மாட்டு வண்டியில் மணல் அள்ளினார். ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., நாகநாதன் புகாரில் அவர் மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வரதட்சணை கொடுமை

திருவாடானை: எஸ்.பி.பட்டினம் அருகே எம்.வி.பட்டினத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு மனைவி முத்துபாண்டியம்மாள் 20. 2019ல் திருமணம் ஆகி, மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக முத்துபாண்டியம்மாள் புகாரில் கணவர் ஆனந்தபாபு, மாமனார் மாரிமுத்து, மாமியார் லதா ஆகியோர் மீது திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வீடு மீது கல்வீச்சு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் வீரபத்திர சுவாமி கோயில் தெரு முருகேசன் 60. தெருவில் காரில் வேகமாக வந்தவர்களை அவர் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் காரில் வந்த ராமேஸ்வரம் சிவகாமி நகரை சேர்ந்த இளவரசன், கார்மேகம், ராம்கி, சூர்யா, மற்றொரு ராம்கி, ஜோதி, வெங்கடேஷ் ஆகிய ஏழு பேர் பாட்டில் மற்றும் கற்களை முருகேசன் வீட்டின் மீது வீசித் தாக்கினர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X