பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி: சர்வீஸ் ரோடு புதுப்பிப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 'தினமலர்' செய்தி எதிரொலி: சர்வீஸ் ரோடு புதுப்பிப்பு

கிணத்துக்கடவு:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு அணுகுபாலத்தை ஒட்டியுள்ள, சர்வீஸ் ரோடு புதுப்பிக்கப்படுவதால், மக்கள் மகிழச்சியடைந்தனர்.கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டை ஒட்டி அணுகுபாலம் உள்ளது. இதனை ஒட்டி மேற்பகுதியில் இருந்த சர்வீஸ் ரோட்டில், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது.குழாயில் அடிக்கடி கசிவு ஏற்பட்டு, ரோட்டில் தண்ணீர் சென்று வந்தது. இதனால், ரோடு குண்டும், குழியுமாக மாறியது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து, 500 மீட்டர் துாரத்துக்கு தார் ரோடு புதுப்பிக்கும் பணி துவங்கியது. இவ்வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தின் மேல் செல்ல அறிவுறுத்தப்பட்டது.இதில், பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்து, தினசரி மார்க்கெட் வரை சர்வீஸ் ரோடு புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சர்வீஸ் ரோடு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X