டீசல் விலை உயர்வு கண்டித்து போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டீசல் விலை உயர்வு கண்டித்து போராட்டம்

Added : ஜூன் 26, 2020
Share

ராமேஸ்வரம்:டீசல் விலை உயர்வு கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தில் 1,500விசைப்படகு, 600 நாட்டு படகுகளும் டீசல் இஞ்சினில் மீன்பிடிக்க செல்வதால், தமிழக அரசு மானிய விலையில் 1,800 மற்றும் 500 லிட்டர் டீசல் வழங்குகிறது.

இதுபோதாமல் தனியார் பங்கிலும் டீசல் வாங்குகின்றனர். தற்போது ஒரு லிட்டர் மானிய டீசல் ரூ.61ம், தனியார் பங்கில் ரூ.78.80க்கு விற்பதால், மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் கூறுகையில், இலங்கை யில் ஒரு லிட்டர் ரூ.42க்கு விற்கும் நிலையில், இங்கு ரூ.78க்கு விற்பது கண்டனத்திற்குரியது. டீசல் விலை உயர்வை வாபஸ் பெற கோரி படகில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவோம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X