சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கு 150 படுக்கைகள்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவமனை நரம்பியல்பிரிவு கொரோனா வார்டாக மாற்றப்பட்டு அங்கு கூடுதலாக 150 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500 கடந்த நிலையில், கூடுதல்படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 150 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு செயல்படுகிறது.

இதில் நோயாளிகள் முழுமையாக உள்ளதால் தற்போது, அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவு வார்டை கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கூடுதலாக 150 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X