மார்க்கெட் பகுதியில் கண்ணாடி விரியன் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் பகுதியில் கண்ணாடி விரியன் மீட்பு

Added : ஜூன் 26, 2020
Share

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட் அருகே, காய்கறி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில், கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.பொள்ளாச்சி தேர்நிலையம், காய்கறி சந்தை அருகே உள்ள கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் பாம்பு ஊர்ந்து சென்றதை வியாபாரிகள் பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் வேட்டை தடுப்பு காவலர் காளிதாஸ், சம்பவ இடத்துக்கு வந்து பாம்பினை லாவகமாக மீட்டார். ஐந்தரை அடி உள்ள கண்ணாடி விரியன் பாம்பை, சேத்துமடை வனப்பகுதியில் விடுவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X