பொது செய்தி

தமிழ்நாடு

பி.மோர்க்குளம் கண்மாயை துார்வார எதிர்பார்ப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 பி.மோர்க்குளம் கண்மாயை துார்வார  எதிர்பார்ப்பு

திருப்புல்லாணி:திருப்புல்லாணி அருகே மண்மேவிய பி.மோர்க்குளம் கண்மாயை துார்வார விவசாயிகள் விரும்புகின்றனர்.

9 ஏக்கர் பரப்பளவு கொண்ட பி.மோர்க்குளம் கண்மாய் பகுதிக்குள் அதிகஅளவு சீமைக்கருவேல மரங்கள் உள்ளது. பருவமழை காலங்களில் கண்மாயில் முழுவதும் நீரை தேக்க வழியின்றி வீணாகிறது.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெய்த பருவமழையால் கண்மாய் பெருக்கெடுத்து, தடுப்பணை வழியாக உபரிநீர் வெளியேறி கொட்டகுடி ஆற்றின் வழியாக சேதுக்கரை கடலில் கலந்து வீணாகியது.

இக்கண்மாய் நீரை நம்பி பயிர்செய்த விவசாயிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்தனர். மேலும் இங்குள்ள தடுப்பணையும் பராமரிப்பில்லாமல் சிதலமடைந்துள்ளது.விவசாயி கே.பழனிச்சாமி கூறியதாவது:கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் துர்வாரப்பட்ட கண்மாயை மழைகாலத்திற்கு முன்பாக துார்வாரியும், தடுப்பணையும் சீரமைக்கஎடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X