பொது செய்தி

தமிழ்நாடு

'யுடேர்ன்' பகுதியில் கூடுதல் சிக்னல்: அதிகாரிகளுக்கு மக்கள் வேண்டுகோள்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள சென்றாம்பாளையம் பிரிவில், 'யுடேர்ன்' பகுதியில் கூடுதல் சிக்னல் பொருத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலையில், வாகனங்கள் திரும்புவதற்கு வசதியாக, பல இடங்களில் 'யுடேர்ன்' அமைக்கப்பட்டு, சிக்னல் வைக்கப்பட்டுள்ளது.இதில், சென்றாம்பாளையம் பிரிவு கிட்ஸ் பார்க் பள்ளி அருகேயுள்ள 'யுடேர்ன்' பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது.கோவையில் இருந்தும், பொள்ளாச்சியில் இருந்தும் வாகனங்கள், அதிக வேகத்தில் 'யுடேர்ன்' பகுதியை கடந்து செல்கிறது.இந்த இடத்தில், பள்ளிக்கும், சென்றாம்பாளையம், நெ.10 முத்துார் செல்வதற்கும் லாரி, பஸ், கார், டெம்போ போன்ற வாகனங்கள் வந்து திரும்புகின்றன.இரவு நேரங்களில் வாகனங்கள் திரும்பும்போது, கோவை, பொள்ளாச்சியில் இருந்து வரும் வாகனங்களுக்கான எச்சரிக்கை செய்வதற்கு ஒரே சிக்னல் மட்டுமே உள்ளது.இதன் வெளிச்சம் போதுமானதாக இல்லை. இதனால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.இதனை தவிர்க்க, கூடுதல் சிக்னல் அமைத்து, விநாடிக்கு ஒரு முறை சிக்னல் எரியும் வகையில் விளக்குகள் பொருத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X