பொது செய்தி

தமிழ்நாடு

கனமழைக்கு வாய்ப்பு: காலநிலை மையம் தகவல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஆனைமலை:கோவை மாவட்டம் முழுவதிலும், இந்த வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை:கோவை மாவட்டம் முழுவதும் இந்த வாரம், கன மழைக்கு வாய்ப்புள்ளது. மழையுடன் அதிவேக காற்றும் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 27 மற்றும் 28ம் தேதி மாவட்டம் முழுவதிலும் சராசரியாக, 25 மி.மீ., அளவுக்கு மழை பெய்யும். காற்றில் அதிகபட்சமாக, 90 சதவீதம் முதல் குறைந்தபட்சமாக, 50 சதவீதம் வரையிலும் ஈரப்பதம் இருக்கும்.வேளாண் நிலத்தில், வரப்பை உயரத்தியும், 'டிரென்ஜ்' அமைத்தும் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கலாம்.அதிவேக காற்றினால், ஐந்து மாதங்களுக்கு மேலுள்ள, கரும்பு, வாழை மற்றும் மரப்பயிர்களுக்கு முட்டு கொடுத்து, பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மழையை பயன்படுத்தி சோளத்துக்கு மேலுரமாக தழைச்சத்து பயன்படுத்தலாம். தென்னைக்கு உரமிட இது நல்ல தருணம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X