தமிழ்நாடு

வராதீங்க! கொரோனாவை தடுக்க வீட்டிலிருந்து வெளியே: தினமும் உயர்ந்து வரும் பாதிப்ப எண்ணிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் அவசிய தேவை என்றால் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளி விட்டு நில்லுங்கள்

மாவட்டத்தில் கடந்த இருநாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் நேற்றுடன்கோரோனா தொற்று பாதிப்பு 500 பேரை கடந்துஉள்ளது. இதில் ஜூன் 21 முதல் 25 வரை ஐந்து நாட்களில் மட்டும் 66 பெண்கள்உட்பட 205 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. அரசு ஊரடங்கு அறிவித்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது 100 மடங்கிற்கு மேல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் தற்போதைய சூழலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுரை, சென்னையை பின்பற்றி முழு ஊரடங்கை அறிவிப்பது அவசியமாகிறது.அதே நேரம், மக்கள் தேவையின்றி அதிகமாக வெளியே சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும்.கொரோனா பரவலை தடுக்க ராமநாதபுரம் வர்த்தகர் சங்கம் பகல் 3:00 மணி வரை மட்டுமே வர்த்த நிறுவனங்களை திறக்க வேண்டும், என தன்னார்வமாக அறிவித்தனர்.ஆனால், அதன்படி ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள், கடைகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால் கொரோனாவை கட்டுப்படுத்த வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். கைகளை குறைந்தது 3 மணி நேரத்திற்கு ஒருமுறை சோப்பு, சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்வது அவசியம். இதன் மூலம் பிறருக்கு தொற்று பரவுவதை நாம் கட்டுப்படுத்த முடியும்.ராமநாதபுரம் மக்களே சிந்தித்து செயல்பட்டு கொரோனாவில் இருந்து உங்களையும், குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X