பொது செய்தி

தமிழ்நாடு

'குட்டீஸ்' மனமகிழ்ச்சிக்கு யோகா பயிற்சி: திசைமாறும் சூழலுக்கு முற்றுப்புள்ளி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

உடுமலை:'வீடுகளில் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும்,' என உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, மாணவர்கள் பள்ளிக்கு சென்று நான்கு மாதங்களை எட்ட உள்ளதால், வீடுகளில் அவர்களை சமாளிப்பது தற்போது பெற்றோரின் சவாலாக உள்ளது.குழந்தைகளை, தொற்று பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய கவனத்துடனும் இருப்பதால், வெளியில் சென்று விளையாடுவதற்கும் அனுமதிக்க முடியாத நிலையில் பெற்றோர் உள்ளனர்.மொபைல்போன் மற்றும் அதிக நேரம் 'டிவி' பார்ப்பது போன்ற நடவடிக்கைகளை குறைக்க வேண்டிய பெற்றோர் வேறுவழியின்றி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கின்றனர். இப்பிரச்னைகளால் குழந்தைகளின் உடல்நலம் சீர்கேடு அடைவதோடு, பெற்றோரும் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு தீர்வாக, யோகா பயிற்சிகளை குழந்தைகள் தொடர்ந்து பின்பற்ற பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர்.ஆலோசகர் ஒருவர் கூறுகையில்,'வீட்டிலிருந்து வெளியில் விடாமல் குழந்தைகளை ஒருமாதம் சமாளிப்பதே பல பெற்றோருக்கும் மிகப்பெரிய காரியமாக இருக்கும். இந்நிலையில், வீட்டிலிருந்து பணிபுரியும் பெற்றோரை தொந்தரவு செய்யாமல், அவர்களை வெளியிலும் விடமால் பார்த்துக்கொள்வதில் பெற்றோரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை மாற்ற, யோகா சிறந்த பயிற்சியாகும். குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்க முதலில் பெற்றோர், முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். மனதை அமைதிபெற செய்யும் சில பயிற்சிகளை ஆலோசகர்கள் மூலம் அல்லது இணையதளங்களில் அறிந்துகொண்டு, தொடர்ந்து செய்துவர வேண்டும்.உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு, மனஅழுத்தம் முதன்மையான காரணமாக இருக்கிறது. இதனால், மனதை அமைதிப்படுத்த யோகா பயிற்சிகளை பெற்றோர் எடுத்துக்கொள்வது இந்த நேரத்தில் அவசியம்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X