என்.எச்., ரோடா... எமனுக்கு 'ரூட்'டா? ரோட்டில் விரிசல்; வாகன ஓட்டிகள் அச்சம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 என்.எச்., ரோடா... எமனுக்கு 'ரூட்'டா? ரோட்டில் விரிசல்; வாகன ஓட்டிகள் அச்சம்

பல்லடம்:பல்லடம் அருகே, என்.எச்.ரோட்டில், ஏற்பட்டுள்ள விரிசல், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பழைய டோல்கேட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து, பள்ளங்களாகி வருகின்றன.அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், கவனக்குறைவு காரணமாக, பள்ளங்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இப்பகுதியில் வெளிச்சம் இல்லாததால், பள்ளங்களில் சிக்கி வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.இதுபோல்,என்.எச்.ரோட்டில், பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, அபாய பள்ளங்கள் உருவாகி வருகின்றன. இவற்றால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே, பயணித்து வருகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன், இதுபோன்ற விரிசல்களை சரிசெய்து, பள்ளங்களை மூட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X