பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.46 ஆயிரம் அபராதம்: வசூல் பறக்கும் படையினர் அதிரடி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் களமிறங்கிய, 22 பறக்கும் படைகள், கொரோனா பாதுகாப்பு நெறிமுறையை பின்பற்றாதவர்களுக்கு, 46 ஆயிரத்து, 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க, சிறப்பு படைகளை அமைத்துள்ளது. மொத்தம், 82 அலுவலர்களுடன், 22 பறக்கும் படைகள் அமைத்து, கூட்டாய்வு நடந்து வருகிறது.நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுமக்களிடையே ஆய்வு மேற்கொள்கின்றனர்.முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. முதல்நாள் களமிறங்கிய பறக்கும் படையினர், 812 நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு நடத்தினர்.அவற்றில், 122 கடைகள் விதிமுறைகள் பின்பற்றாததை கண்டறிந்து, 46 ஆயிரத்து, 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதேபோல், 6,433 நபர்களை சந்தித்து, கொரோனா தொடர்பான ஆய்வு நடத்தியுள்ளனர்.அதிகபட்சமாக, மாநகராட்சி முதல் மண்டலத்தில், 7,800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நான்காவது மண்டலத்தில், 6,400 ரூபாயும், ஊத்துக்குளியில், 6,200 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட்டது.பொங்கலுார், தாராபுரம், குண்டடம், காங்கயம், குடிமங்கலத்தில், அபராதம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இரண்டாவது நாளாக நேற்றும் ஆய்வு தொடர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X