பொது செய்தி

தமிழ்நாடு

பீகாரை சேர்ந்த, 9 பேர் தனிமை; கண்காணிப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருப்பூர்:பீகார் மாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்த, ஒன்பது பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, முத்து நகரில், இரண்டு குழந்தைகள் உட்பட, ஒன்பது பேர் தங்கி, பாணிபூரி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஏப்., மாதம் சொந்த ஊரான பீகாருக்கு சென்றனர். அங்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால், மீண்டும் திருப்பூருக்கு வர முடிவு செய்தனர்.பீகாரில் இருந்து ரயில் மூலம் நேற்று முன்தினம் பெங்களூரு சென்றனர். இதனால், திருப்பூரில் உள்ள பானிபூரி கடை உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். அவர் கார், மூலம் பெங்களூரு சென்று ரயில்வே ஸ்டேஷனில் இருந்த, ஒன்பது பேரையும் திருப்பூர் அழைத்து வந்தனர்.பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.வீட்டில் இருந்த, ஒரு பெண், இரு குழந்தைகள் உட்பட, ஒன்பது பேரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். பின், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X