அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை பஸ் ஸ்டாண்டில் வலம் வந்த முதல்வர்

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
tamil nadu, coimbatore, coimbatore coronavirus, Tamil Nadu Chief Minister, K Palanisamy

கோவை: கோவை வந்த முதல்வர் பழனிசாமி பஸ் ஸ்டாண்ட் சென்று மக்களை சந்தித்து 'கொரோனா' விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

'கொரோனா' பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
பிற்பகல் 3:30 மணி. முதல்வர் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் வந்தார். அமைச்சர் வேலுமணி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உடன் வந்தனர். இவர்களை தவிர கட்சியினர் எவரும் இல்லை.பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நடக்க ஆரம்பித்த முதல்வர் இரண்டு பெண்களிடம் பேசி அவர்களிடம் குறைகளை கேட்டார்.


latest tamil news



பின் உக்கடம் பஸ்சுக்குள் ஏறினார். சற்று தயங்கியபடி அமைச்சர் வேலுமணி பின்தொடர்ந்தார். இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளிடம் 'முகக்கவசம் அணியணும்; சமூக இடைவெளி விட்டு நடந்து போங்க; 20 வினாடி கை கழுவணும்' என அறிவுரை வழங்கினார்.
கீழிறங்கி எதிரில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்றார். அங்கு விற்கப்படும் முகக்கவசம் குறித்து விசாரித்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
27-ஜூன்-202005:46:15 IST Report Abuse
Elango கோவை மாவட்டம் பொருத்தவரை வேலுமணி தான் பலம் வாய்ந்தவர்.... EPS அங்கே ஒன்றும் செய்ய வாய்ப்பில்லை.... கொரோணா வென்ற வீரர் என்று தனக்கு தானே போஸ்டர் ஒட்டி கொண்டு விட்டார். இப்போது கொரோணா கட்டுக்குள் அடங்காமல் பரவிவருகிறது
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
26-ஜூன்-202019:14:02 IST Report Abuse
dina யாரடா ராஜா நரசிம்மன் யாராவது ஞாயமா வேலை செய்தல் பிடிக்காதே......?
Rate this:
Cancel
sivansakthi - dindugal,இந்தியா
26-ஜூன்-202014:03:25 IST Report Abuse
sivansakthi நல்லது செய்தால் வரவேற்போம் , இந்த செயலில் தவறு எதுவும் இல்லை.வளர்க முதல்வரின் பணி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X