பொது செய்தி

தமிழ்நாடு

முதியவரின் சடலம்: அகற்றுவதற்கு அசட்டை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், இறந்த முதியவரின் சடலத்தை அகற்ற அரசு மருத்துவ கல்லுாரி நிர்வாகம் அசட்டையாக இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தின் நுழைவு வாயில் முன், உதவி மையம் உள்ளது. அதன் அருகே, 75 வயது மதிக்கதக்க முதியவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். அவர் உடலில் ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தது. முதியவர் இறந்தது குறித்து பொதுமக்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை.கொரோனா பரவல் அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில், சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து மக்கள் தெரிவித்து வந்த நிலையில், சடலம் அகற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X