வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கடையடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கடையடைப்பு

Added : ஜூன் 26, 2020
Share

திருப்பூர்:சாத்தாங்குளம் சம்பவத்தை கண்டித்து, அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், திருப்பூரில் இன்று கடையடைப்பு நடத்துகின்றனர்.சாத்தாங்குளம் பகுதியில், போலீசார் தாக்கியதில், மொபைல் போன் கடை உரிமையாளர்கள் இறந்தனர். இதற்கு வியாபாரிகள் சங்கங்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், திருப்பூர் மாவட்ட நிர்வாகி கணேஷ் கூறுகையில், ''மாநில அளவிலான ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் இன்று நடக்கிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படும். பல்வேறு அமைப்புகளும் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றன,'' என்றார்.திருப்பூரில் இன்று நடக்கும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, மருந்து கடைகள், காலை, 7:00 முதல், 11:00 மணி வரை அடைக்கப்படுவதாக, மருந்து வணிகர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X