புதுக்கண்மாய் குடிமராமத்து பணியில் குளறுபடி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 புதுக்கண்மாய் குடிமராமத்து பணியில் குளறுபடி

காரைக்குடி:காரைக்குடி வ.உ.சி.ரோடு புதுக்கண்மாய் குடிமராமத்துப்பணியில் நடந்த முறைகேடு காரணமாக, மழைநீர் வீணானதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

காரைக்குடி 12 வது வார்டிற்கு உட்பட்ட செல்லஞ்செட்டி ஊரணி சாலையில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். நகராட்சிக்கு சொந்தமான மணக்காட்டு கண்மாய் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இக்கண்மாயில் துார்வாரும் பணி நடந்தது. கண்மாய்க்குள் 20 அடி ஆழத்திற்கு தோண்டிய மணலை கரைகளில் கொட்டி, கண்மாயை பலப்படுத்தவில்லை.

மணலை வெளியில் விற்றுள்ளனர். இதனால், தற்போது பெய்யும் மழைக்கு கண்மாய் உடனே நிரம்பி, மழை நீர் வீணாக ஓடுகிறது. மேலும், கண்மாய் தண்ணீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.மக்கள் கருத்துகாந்தி கூறியதாவது:கண்மாய் துார்வாரியபின், அம்மணலை கரையில் கொட்டி பலப்படுத்தாமல் விட்டுள்ளனர்.

இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இது குறித்து அதிகாாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.விஜயா கூறியதாவது:செல்லஞ்செட்டி ஊரணி ரோட்டின் நடுவே பாலம் உடைந்து வரத்து கால்வாய் அடைபட்டு விட்டது. கழிவுநீர் கண்மாயில் கலப்பதோடு, மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. கண்மாய் கரையை பலப்படுத்தாமல் விட்டதே இந்நிலைக்கு காரணம்.

தாசில்தார் பாலாஜி கூறியதாவது: இக்கண்மாய் குப்பைகளால் நிரம்பி கிடந்தன. மண் ஏதும் இல்லை. ஆக்கிரமிப்பை அகற்றி, கண்மாயை புனரமைத்தோம். 40 ஆண்டுக்கு பின் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடுகளை பாதிக்கும் கரைகள் பலப்படுத்தப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X