மளிகைப்பொருட்கள் விலை உயர்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மளிகைப்பொருட்கள் விலை உயர்வு

Added : ஜூன் 26, 2020
Share

சின்னமனுார்:உத்தமபாளையம் தாலுகாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மளிகை பொருட்கள் 'டோர் டெலிவரி' செய்வதற்கு மட்டுமே அனுமதியுள்ளது.

இதை பயன்படுத்தி மளிகை பொருட்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் ரூ. 100க்கு விற்பனையான கிலோ உளுந்து ரூ. 120 முதல் ரூ. 140 ஆக அதிகரித்தது. ரூ. 140க்கு விற்ற பாசிப்பருப்பு ரூ. 200 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.ரூ. ஆயிரத்து 300க்கு விற்ற 25 கிலோ பொன்னி அரிசி சிப்பம் ரூ. ஆயிரத்து 600 ஆக உயர்ந்து உள்ளது. சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மொத்த விற்பனை விலை அதிகரிக்காத நிலையில், சில்லறை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X