பொது செய்தி

தமிழ்நாடு

கிடைக்குமா? பின்னலாடை தொழிலாளர்களுக்கு தளர்வு அளிக்கவேண்டும்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருப்பூர்:இ-பாஸ் பெறுவதில், பின்னலாடை தொழிலாளர்களுக்கு தளர்வு அளிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூரில் இயங்கும் ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் பணிபுரிகின்றனர். திருப்பூர் புறநகர் பகுதிகள், கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பஸ், ரயில்களில் வந்து செல்கின்றனர்.கொரோனா ஊரடங்கால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தின. தமிழக தொழிலாளர் ஏரளமானோர் சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஊரடங்கு தளர்வுக்குப்பின், மே 6ம் தேதி முதல், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி துவங்கியுள்ளது. இந்நிலையில், வடமாநில தொழிலாளர் அதிகளவு சொந்த ஊர் சென்றுவிட்டனர்.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள், ஊரடங்கு தளர்வு, பஸ் இயக்கத்தால், வெளியூர் பகுதி தொழிலாளர்களைக்கொண்டு, ஆடை தயாரிப்பு, முக கவசம், முழு கவசம் தயாரிப்பு பணிகள் நடந்துவருகின்றன. வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மாவட்ட எல்லையை கடந்து செல்ல, இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை, ஈரோடு பகுதிகளைச்சேர்ந்த தொழிலாளர்கள், திருப்பூர் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பின்னலாடை துறையினர் கூறியதாவது:தற்போது, ஆடை உற்பத்தி துறை படிப்படியாக எழ துவங்கியுள்ளது. வடமாநில தொழிலாளர் சொந்த ஊர் சென்றுவிட்டனர். தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஊரடங்கு தளர்வால், பஸ், டூவீலர்களில் வெளியூர் தொழிலாளர்கள், பணிக்கு வரத்துவங்கினர்.இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், வெளியூர் பகுதி தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத நிலை உருவாகியுள்ளது. பின்னலாடை தொழிலாளர்களுக்கு, இ- பாஸ் பெறுவதில் தளர்வு அளிக்கவேண்டும். போதிய தொழிலாளர் பணி அமர்த்தப்பட்டால் மட்டுமே, உற்பத்தி சீராக நடைபெறும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X