மானாமதுரையில் ரோடு புதுப்பிப்பதில் குழப்பம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மானாமதுரை:மானாமதுரை பேரூராட்சி 10வது வார்டில் ரோடு போடவும், வேண்டாம் என இருதரப்பினர்போராட்டம் செய்வதால், பேரூராட்சி அலுவலர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த வார்டிற்கு உட்பட்ட நியூவசந்த நகர், பர்மாகாலனி உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக்கான வீடுகளில் வசிக்கின்றனர். இப்பகுதி வளர்ந்து வரும் நகராக இருப்பதால், இங்கு புதிதாக ரோடு போட பேரூராட்சியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆதனுார் கிராம கண்மாய்க்கு உட்பட்ட பகுதியில் ரோடு போட சென்றால், அப்பகுதி மக்கள் வேண்டாம் என தடுக்கின்றனர்.

ஆனால், நியூ வசந்த நகர், பர்மா காலனி மக்கள் இப்பகுதியில் ஏற்கனவே 4 முறை ரோடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. மீண்டும் புதிதாக ரோடு போட வேண்டும் என பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தாசில்தார் பஞ்சாபிகேஷன், செயல் அலுவலர்குமேரசன், இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர். அதே நேரம் ரோடு போடுமாறும், வேண்டாம் என்று இரு தரப்பினர் போராட்டம் நடத்துவதால், பேரூராட்சி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X