பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசியில் மீண்டும் கொரோனா: வேகமெடுத்த சுகாதார பணிகள்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 அவிநாசியில் மீண்டும் கொரோனா: வேகமெடுத்த சுகாதார பணிகள்

அவிநாசி:அவிநாசி மற்றும் உடுமலையில், தலா ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி, 121 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். உடுமலை அரசு மருத்துவமனையின், 52 வயதுள்ள 'டயாலிஸ்' பிரிவு செவிலியருக்கு, நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.அவருடைய கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உட்பட, தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.அவிநாசி, ஜெய்சக்தி அவென்யூ பகுதியில், 45 வயதுள்ள ஆண், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மே 29ம் தேதி, வடுகபாளையத்தில் அவரது தந்தை இறந்தார். துக்க நிகழ்வுக்கு, கோவை, ஈரோடு, சென்னை என, பல இடங்களில் இருந்தும் அவரது உறவினர்கள் வந்துள்ளனர்.கடந்த, 22ம் தேதி காலை அவிநாசி வந்தார். திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொற்று உறுதியானதால், ஜெய்சக்தி அவென்யூ மற்றும் சுற்று வட்டாரத்தில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அப்பகுதியில் உள்ள, 40 குடும்பத்தினருக்கும் சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர். வடுகபாளையம் ராயகவுண்டம்புதுாரில் உள்ள அவரது வீட்டில் வசிக்கும் உறவினர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 67 நாள் இடைவெளிக்கு பின், அவிநாசியில் ஒருவருக்கு தொற்று பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X