பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு 132 படுக்கை தயார்: கலெக்டர் தகவல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை:''கொரோனா தொற்று அதிகரித்தால் சிகிச்சை தர சிவகங்கை பழைய அரசு மருத்துவமனையில் 132 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்படும்,'' என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தற்போது சிவகங்கை அரசு புதிய மருத்துவமனையில் 67 படுக்கைகளும், பழைய மருத்துவமனையில் 52 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு செயல்படுகிறது. தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் பாதிப்பு அதிகமுள்ள நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஏற்கனவே பழைய மருத்துவமனையில் 52 படுக்கைகள் உள்ளன.

மேலும் 80 படுக்கைகள்ஏற்படுத்தி, ஒட்டு மொத்தமாக 132 படுக்கைகளுடன் சிகிச்சை அளிக்கப்படும். அமராவதிபுதுார் அரசு மருத்துவமனையில் தொற்று உறுதியாகி, பாதிப்பில்லாதவர்களை தனிமையில் வைக்க 52 படுக்கைகள் உள்ளன.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்புவோர் இ--பாஸ் மூலமே விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X