பொது செய்தி

தமிழ்நாடு

73 பஸ்கள் மட்டுமே இயக்கம்; மக்கள் ஏமாற்றம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 73 பஸ்கள் மட்டுமே  இயக்கம்; மக்கள் ஏமாற்றம்

திருப்பூர்:மண்டலத்துக்குள் பஸ் சேவை ரத்து செய்யப்பட்டதால், மாவட்டத்துக்குள், 73 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மண்டலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு முதல்வர் தடை விதித்தார். இதனால், திருப்பூர் மண்டலத்தில் இருந்து இயக்கப்பட்ட, 169 பஸ்களில் எண்ணிக்கை நேற்று காலை, 73 ஆக குறைக்கப்பட்டது.மாவட்ட எல்லை வரை மட்டுமே பஸ்கள் செல்கின்றன. மண்டலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், நேற்று பஸ் ஏற வந்த பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். விவரம் பஸ் ஸ்டாண்டில் வெகுநேரம் காத்திருந்தனர். பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால், புதிய பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. அதே நேரம் டவுன் பஸ்களில் கூட்டம் காணப்பட்டது.தொடர்ந்து இயக்கப்படும்போக்குவரத்து துறை இயக்க குழுவினர் கூறுகையில், 'அத்தியாவசிய பொருள் தொடர்ந்து கிடைத்திட உதவும் வகையில் நம்பியூர், குன்னத்துார், சேவூர், தெக்கலுார், கண்டியன்கோவில், சம்மந்தம்பாளையம், பொங்கலுார் பகுதியில் இருந்து வழக்கம் போல் காலை நேர பஸ்கள் தொடர்ந்து இயங்கும். உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வர விவசாயிகள் பஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X