பொது செய்தி

தமிழ்நாடு

டெண்டர் படிவம் தி.மு.க.,விற்கு தடை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருப்புத்துார்,:திருப்புத்துாரில் நேற்று நடந்த டெண்டர் படிவம் வாங்க சென்ற தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்களுக்கு போலீசார் தடை விதித்ததால், அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பொது நிதி ரூ.90லட்சத்தில் 42 பணிகள் செய்ய, டெண்டர் படிவம் வழங்கப்பட்டது. ஏற்கனவே இதற்கான டெண்டர் ஜூன் 18ல் நடந்தபோது, அ.தி.மு.க.,- தி.மு.க.,வினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், ஒத்தி வைத்தனர். இதற்கான படிவம் வழங்கும் பணி நேற்று துவங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டனர். அங்கிருந்த போலீசார் ஒப்பந்ததாரர்களை தவிர வேறு யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

குறிப்பாக தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்களை கூட அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கிருந்த போலீசாரும், ஒப்பந்ததாரர்களை மட்டுமே அனுமதிக்குமாறு அதிகாரிகள் கூறியதால், தடை செய்தோம் என தெரிவித்தனர்.ஒன்றிய தலைவர் சண்முக வடிவேலின் சமாதானத்திற்கு பின், ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்றனர்.இது குறித்து பி.டி.ஓ., ஜெயராமன் கூறியதாவது: பாதுகாப்பு கருதி ஒப்பந்ததாரர்கள் தவிர பிறரை அனுமதிக்கவில்லை. இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X