தமிழ்நாடு

கொரோனா அதிகரிப்பு :சுகாதாரத்துறை 'அலர்ட்'

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 கொரோனா அதிகரிப்பு :சுகாதாரத்துறை 'அலர்ட்'

திருப்பூர்;கொரோனா பரவல் அதிகரிப்பதால், வென்டிலேட்டர் வசதியுடன், 2,233 படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருவோரை பரிசோதனைக்கு உட்படுத்தும்போது, நோய் தொற்று உறுதியாகிறது. இதனால், நோய் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பரவல் அதிகரித்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, தாலுகா மருத்துவமனைகளில், கூடுதலாக, 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திடீரென கொரோனா தொற்று பரவல் அதிகரித்தாலும், உரிய சிகிச்சை வசதி தேவை என்பதால், 2 ஆயிரத்து, 233 படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது: தற்போதைய சூழலில், கொரோனா பாதித்த நபர் கண்டறியப்பட்டால், குடும்பத்தார் மற்றும் அவருடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகின்றனர். கொரோனா பரவல் அதிகரிக்கும்பட்சத்தில், சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வகையில், திருப்பூரில் ஜெய்வாபாய் பள்ளி, அவிநாசியில், மகாராஜா கல்லுாரி, தாராபுரத்தில் அரசு ஐ.டி.ஐ., என, தாலுகா வாரியாக, தற்காலிக மருத்துவமனை அமைக்கப்படும். வென்டிலேட்டர் வசதியுடன், 2,233 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தேவையான அளவு, கட்டில், மெத்தை, பெட்ஷீட் மற்றும் மருத்துவ உபகரணங்கள், தருவிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X