மரம் ரோட்டில் முறிந்து விழுந்தது :அதிகாரி அசட்டையால் விபரீதம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 மரம் ரோட்டில் முறிந்து விழுந்தது :அதிகாரி அசட்டையால் விபரீதம்

திருப்பூர்:அதிகாரிகளின் அலட்சியத்தால், மங்கலத்தில் ரோட்டோரம் இருந்த மரம் முறிந்து விழுந்து வாகனத்தில் சென்றவர் காயமடைந்தார்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே ரோட்டோரம் உள்ள மரம் ஒன்று பலவீமான நிலையில் இருந்தது. வேர் பகுதியில் வலுவிழந்து சாய்ந்ததால், முறிந்து விழாமல் இருக்கும் வகையில், அதற்கு சிலர் தாங்கல் கொடுத்து நிறுத்தினர்.
இது குறித்து பல்லடம் நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நேற்று முன்தினம் இரவு இந்த மரம் திடீரென வேரோடு முறிந்து ரோட்டில் சரிந்தது. அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒரு நபர் தடுமாறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, அவர் உயிர் தப்பினார்.அப்பகுதியினர் கூறுகையில், 'மரம் ஆபத்தான நிலையில் உள்ளது குறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது முறிந்து ரோட்டில் விழுந்தும் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை.' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X