பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் வடிகால் கட்டும் பணி பல்லடம் ரோட்டில் மும்முரம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 மழைநீர் வடிகால் கட்டும் பணி பல்லடம் ரோட்டில் மும்முரம்

திருப்பூர்:பல்லடம் ரோடு, பூம்புகார் பகுதியில் மழை நீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.திருப்பூர், பல்லடம் ரோடு, இரு ஆண்டுகளுக்கு முன் அகலப்படுத்தப் பட்டது. அப்போது ரோட்டின் இரு புறமும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி சில இடங்களில் விடுபட்டது.அதனால், தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பிலிருந்து பூம்புகார் பகுதி வரையில், 400 மீ., துாரத்துக்கு வடிகால் கட்டப்படவில்லை.தற்போது ரோட்டின், இரு புறமும் மழைநீர் வடிகால் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதற்காக ரோட்டோரம் குழி அமைக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. பணி முடித்து அதன் மீது ஸ்லாப் மூடியும் அமைக்கப்படும்.இப்பகுதியில் மழை பெய்யும் போது, மழைநீர் ரோட்டிலும், ரோட்டோரத்திலும் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்டது. இனி, வடிகால் அமைப்பதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X