பொது செய்தி

தமிழ்நாடு

'கடன்களை மறுசீரமைப்பு செய்யுங்க'

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருப்பூர்:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, கடனை மறு சீரமைப்பு செய்வதற்கான, விரிவான விளக்கங்களுடன் கூடிய வழிகாட்டி அறிக்கை வெளியாகியுள்ளது.கொரோனாவால், இரண்டு மாதம் அனைத்து வகை நிறுவனங்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தையும், நிறுவனங்களையும் மீட்டெடுக்கும் வகையில், பிரதமர் மோடி, ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.கடன் மறு சீரமைப்புக்கான இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான விளக்கங்களுடன் கூடிய வழிகாட்டுதல் அறிக்கையை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.இது குறித்து, தொழில்பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:ஆடை உற்பத்தி உட்பட திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு துறைசார்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனத்தினர், வங்கிகளை அணுகி, தங்கள் கடன்களை மறுசீரமைப்பு செய்து, பயன்பெற வேண்டும். நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு இந்த சீரமைப்பு திட்டம் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.திட்டம் குறித்து கூடுதல் தகவல் தேவைப்படுவோர், திருப்பூர் - பல்லடம் ரோடு, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள தொழில்பாதுகாப்புக்குழு அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X