சுற்றுலா தலமல்ல, மருத்துவமனை:சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சுற்றுலா தலமல்ல, மருத்துவமனை':சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

Added : ஜூன் 26, 2020
Share

திருப்பூர்:அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு, நோயாளியுடன், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வருவதாக, டாக்டர்கள் வேதனைப்படுகின்றனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெறுவதற்காக, தினமும் ஏராளமானோர் செல்கின்றனர். ஊரடங்கின்போது, தனியார் மருத்துவமனைகள், குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டு வந்தன. ஊரடங்கில் தளர்வைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளும், முழு அளவில் இயங்கி வருகின்றன.வழக்கமான பரிசோதனைக்கு, ஊரடங்கு காரணமாக, செல்ல முடியாமல் இருந்த நோயாளிகள் பலர், தற்போது, மருத்துவமனைகளை அதிகளவில் நாடத் துவங்கியுள்ளனர்.சுகாதார துறையினர் கூறியதாவது:சிகிச்சை பெறுவதற்கும், பரிசோதனைக்கும், நோயாளி மட்டும் வந்தால்கூட போதும். துணை தேவைப்பட்டால் மட்டும், நோயாளிகளுடன் ஒருவர் வரலாம். ஆனால், நோயாளிகளுடன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் வருகின்றனர். இவர்களும், முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.கொரோனா பரவல் நேரத்தில், இவ்வாறு வருவது, நோயாளிக்கும், அவருடன் வருவோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து, மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை நோயாளிகள் பலர் பொருட்படுத்துவதில்லை.மருத்துவமனைகள், தொற்றுப் பரவல் நேரத்திலும் செயல்படுவது, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான். இதை, அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X