பொது செய்தி

தமிழ்நாடு

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் பதுக்குவது குறைகிறது

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Swiss banks, indian money, swiss bank india


புதுடில்லி :சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தின் அளவு 6 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன. நம் நாட்டில் முறைகேடான வழிகளில் பணம் ஈட்டியவர்கள் அதற்கு வரி செலுத்தாமல் ஏமாற்றுவதற்காக சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கி வைக்கும் நடைமுறை நீண்ட காலமாக உள்ளது.


latest tamil news



பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு பதவியேற்றதும் இதற்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டுன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் விபரத்தை தெரிவிக்க அந்த அரசு சம்மதித்தது.
இந்த நடவடிக்கை காரணமாக சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன் பதுக்கும் பணத்தின் அளவும் குறைந்தள்ளது.
இந்நிலையில் இந்தியர்களால் சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட பணம் பற்றிய விபரத்தை சுவிஸ் மத்திய வங்கி நம் அரசுக்கு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்தாண்டை விட இந்தாண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள பணத்தின் அளவு 6 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது ஒட்டு மொத்தமாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் 6625 கோடி ரூபாய் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganesan - kk nagar chennai,இந்தியா
26-ஜூன்-202015:07:30 IST Report Abuse
r ganesan கருப்பு பண விஷயத்தில் மோடி அரசு ஒரு தோல்வி என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். நொண்டி சாக்கு சொல்வதில் பலன் கிடையாது, நம் அரசு ஐக்கிய நாட்டு சபைக்கு ஒரு கடிதம் எழுதினால் இந்த பணமெல்லாம் அரசு பணம் ஆகி விடும். இதை முன்னமேயே PHILIPPINES உட்பட மூன்று நாடுகள் செய்து வெற்றியும் கிடைத்து இருக்கிறது. மோடி அரசு இதை செய்ய தயங்குகிறது.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-ஜூன்-202012:43:11 IST Report Abuse
sankaseshan இங்கு வாசகர்களால் தெரியவரும் தகவல்களால் பணப்பதுக்கலில் அதிக அனுபவம் உள்ளவர்கள் என்பது தெரிகிறது. கன்சல்டண்சி சர்விஸ் நடத்தலாம் .
Rate this:
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
26-ஜூன்-202009:36:59 IST Report Abuse
Chowkidar Modikumar இப்போதெல்லாம் சுவிஸ் வங்கி மூலம் பணம் பதுங்குவது ஓல்ட் பேஷன். மூணுமணி நேர விமான பயணம், கிளு கிளு சிங்கப்பூர். சுவிஸ் வங்கியை விட மிக சிறப்பாக சிங்கப்பூரில் உள்ள DBS, HSBC, STANDARD CHARTERED, CITI ,WESTPAC, BLOCK ROCK பேங்க் ஆகிய வங்கிகள் மிக சிறப்பாக செய்கிறது. இங்குள்ள அணைத்து வங்கிகளும் பிளாக் மணி மேனேஜ்மென்ட் தொழில்கள் தான் செய்து வருகிறது. சிங்கப்பூர் உலகத்தின் பண ஹப் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். கடந்த ஐந்து வருடங்களாக நமது அமலாக்க மற்றும் உளவு துறை சிங்கப்பூர் தூதரகத்தில் தனி பிரிவு வைத்து கருப்பு பண முதலைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. 2014 ம் ஆண்டுக்கு பின் அரசியல் மூலம் நிகழும் கண்டெய்னர் மூலம் கடத்தப்படும் கருப்பு பண கலாச்சாரம் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இருப்பதை எப்படி பாதுகாப்பது என்பது தான் தற்போதய முதலைகளின் கவலை. பண மதிப்பிழப்பு நடந்தபின் இருபதுக்கும் அதிகமான அறுபது அடி நீள கண்டைனர்களை சிங்கப்பூரில் பிளாக் மணி மேனேஜ்மென்ட் டய் கவனிக்கும் மூன்று எழுத்து வங்கி ஓன்று சிறிய கப்பலில் எடுத்து சென்று சவுத் சீனா கடலில் எறிந்ததை நமது ரா உளவு அமைப்பு ஆதாரத்துடன் வெளியிட்டது. இதே போல் தான் பண மதிப்பிழப்பு நடந்தபின் மொரீஷியஸில் சில வங்கிகள் நொடித்தும் போனது. இதில் முக்கியமாக ப சிதம்பரம், தினகரன் , திமுக அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருந்த பணத்திற்கு திருநீர் அடித்து விட்டதய் போல் இன்னும் அதிர்ச்சியில் மீள முடியாமல் நிறைய கான் + கிராஸ் பார்ட்டிகள் நிர்கதியாய் நிற்கிறார்கள். இதன் காரணமாக மோடி எதிர்ப்பு என கூட்டு சேர்ந்து பிரதமர் மோடியை வீழ்த்தி மறுபடியும் விட்டதை பிடிக்க பகல் கனவு காண்கிறார்கள். இனி ஒரு மொழ கயிருடன் விட்டத்தை தான் பிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X