பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர் மேம்பட  நடவடிக்கை அவசியம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி:திம்மரசநாயக்கனுார், டி.பொம்மிநாயக்கன்பட்டியில் நிலத்தடி நீர் மேம்பட ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பை நம்பி உள்ள இக்கிராமத்தில் நீரை தேக்கி வைக்க குளம், கண்மாய் இல்லை. நிலத்தடி நீரை மட்டுமே நம்பி பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. அது குறைவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.அவர்கள் கூறியதாவது: ஆண்டிபட்டி கணவாய் மலையை ஒட்டி உள்ள திம்மரசநாயக்கனுார் ஊராட்சிக்கு மலைப்பகுதியில் இருந்து வரும் பெரிய ஓடையே நிலத்தடி நீருக்கு ஆதாரம். கடந்த பல ஆண்டாக இப்பகுதியில் போதிய மழை இல்லை.

ஓடையில் இருந்த மணல் சுரண்டி எடுக்கப்பட்டு விட்டது. பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. நீர் வரத்து குறைவதால் விவசாய கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு இல்லை. இறவை பாசனத்தில் இரண்டு போகம் விளைந்த நிலங்கள் தற்போது தரிசாகி விட்டன. எனவே ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதிக தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X