நகர் நல மையத்திற்குள் மழை நீர்: மருந்து பொருட்கள் சேதம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 நகர் நல மையத்திற்குள் மழை நீர்: மருந்து பொருட்கள் சேதம்

தேவகோட்டை:தேவகோட்டையில் உள்ள நகர் நல மையத்திற்குள், சாக்கடை கழிவுநீருடன் மழை நீர் புகுந்ததால், மருந்து பொருட்கள் சேதமானது.

இம்மையத்திற்கு தினமும் 150 நோயாளிகள் சென்று வருகின்றனர். இம்மையம் நகரில் சேகரமாகும் கழிவு நீர் செல்லும் கால்வாய் மேல் உள்ளது. முறையாக இக்கால்வாயில் தேங்கும் கழிவுகளை நகராட்சியினர் அகற்றவில்லை. இதனால், நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழைக்கு, கால்வாயில் மழை நீர் செல்ல வழியின்றி, கழிவுகள் அடைத்திருந்தன.

இதனால், மழை நீர் முற்றிலும் நகர்நல மையத்திற்குள் புகுந்தது.இதனால், ஒரு அடி ஆழத்திற்கு மழை நீர் தேங்கி நின்றது. இதனால், தரையில் வைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்கள், அலுவலக ஆவணங்கள் அனைத்து நனைந்து வீணானது.இங்கிருந்த மருந்து பெட்டி, அலுவலக ஆவணங்களை வெளியேற்றிய, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அங்கிருந்த கழிவு, மழைநீரை அகற்றினர். இதனால், நேற்று நகர்நல மையத்திற்கு விடுமுறை விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X