பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' குளங்கள் :மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.கோவையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில், பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், ரூ.39.74 கோடியில் உக்கடம் பெரிய குளத்தில், வடக்கு கரையில் செய்யப்பட்டுள்ள பணிகள், வாலாங்குளத்தின் கரையில், மேம்பாலத்துக்கு கீழ், ரூ.23.83 கோடியில் செய்யப்பட்டுள்ள பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, நேற்று முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
ரூ.166 கோடியில் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்தில், சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும், கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதல்வர் துவக்கி வைத்தார்.உக்கடம் குளக்கரையில் நடந்த நிகழ்வில், நிர்வாக பொறியாளர் சரவணக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் உமா, வாலாங்குளக்கரையில், உதவி நிர்வாக பொறியாளர் கருப்பாத்தாள் மற்றும் ஒப்பந்த நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'உக்கடம் மற்றும் வாலாங்குளத்தின் கரையில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் முழுமையாக முடியும். 'கொரோனா' வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். கோவை மக்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு தலமாக, இக்குளங்கள் இருக்கும். பில்லுார் குடிநீர் திட்டம், நான்கு 'பேக்கேஜ்'களாக செய்யப்படும். அதில், சுத்திகரிப்பு நிலையம் கட்டுவது, சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X