சம்பவம் செய்தி

தமிழ்நாடு

70 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமல் பாதிப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் கொரோனாவால் நேற்றுமுன்தினம்வரை 418 பேர் பாதிப்படைந்தனர். 70 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் 50 வயதுக்கு கீழ், ரத்த அழுத்தம் சீராக உள்ளவர்கள், சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக, கல்லீரல் பாதிப்புக்கள் இல்லாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் தேனி சமதர்மபுரம் அரசு மருத்துமவமனையில் 7 பேர், ஓடைப்பட்டி, கோவிட் -19 கேர் சென்டரில் 2 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஐம்பது வயதுக்கும் மேல் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், மிகக் குறைவான பாதிப்பு உள்ளவர்களை அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டபொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் கூறியதாவது: டொம்புச்சேரி கோவிட்-19 கேர் சென்டர் ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கூடுதல் நபர்கள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்த வடபுதுப்பட்டி தனியார் பொறியியல் கல்லுாரி, போடி அரசு பொறியியல் கல்லுாரி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு சிகிச்சை அளிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X