தமிழ்நாடு

வாய்ப்பு! சிவகங்ககையில் கொரோனா தொற்று அதிகரிக்க: மக்களிடம் ஊரடங்கு கட்டுப்பாடு அவசியம்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுடன் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களே தங்களுக்குள் கட்டுப்பாட்டை கடைபிடித்து தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க முன்வர வேண்டும்.


கொரோனா தொற்றுஅதிகரிப்பு



மாவட்டத்தில் மார்ச் 30ல் டில்லியில் இருந்து வந்தவர்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று உருவானது. அதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தியதால், பிழைக்க வழியின்றி மும்பை, சென்னையில் இருந்து சொந்த மாவட்டமான சிவகங்கைக்கு அதிகளவில் வரத்துவங்கினர். இதனால், தொற்றுடன் வருவோர் எண்ணிக்கை மூன்று இலக்கத்தை தொடும் நிலைக்கு உயர்ந்து விட்டது.

என்னதான் அரசு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தாலும், தொற்றால் மக்கள் பாதிக்காமல் இருக்க அரசுடன், மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.முக கவசம்,சமூக இடைவெளி எங்கேஆனால், மாவட்டத்தில்அனைத்து இடங்களிலும் தடையை மீறி வாரச்சந்தை நடப்பதும், அங்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளியின்றியும், முக கவசம் அணியாமல் செல்வது வாடிக்கையாகி விட்டது.

ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவர் மட்டுமே அத்தியாவசியதேவை இருந்தால் மட்டுமே, வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். ஆனால், டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் பொழுது போக்கிற்காக ரோட்டில் சுற்றுகின்றனர்.இது போன்று மக்களும், தொற்றை குறைக்க சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமல் செல்வதால், நாளுக்கு நாள் தொற்றுடன் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மக்களே விழிப்போம்... கொரோனாவை விரட்டுவோம்.


கொரோனா தொற்றுடன் 287 பேர்

மாவட்டத்திற்குள் மார்ச் 30 முதல் நேற்று (ஜூன் 25) வரை வெளிநாடு, மாநிலம், சென்னையில் இருந்து வந்தவர்களில் 11 ஆயிரத்து 961 பேரின் ரத்தம், சளி மாதிரியை பரிசோதனை செய்தனர். அதில், 287 பேர்களுக்கு தொற்று உறுதியானது.இதில், சிவகங்கை - 127, விமானம் மூலம் வருகை - 15, ரயிலில் - 4, சென்னை - 117, ராமநாதபுரம் - 13, மதுரை - 4, செங்கல்பட்டு - 5, காஞ்சிபுரம், திருவள்ளூர் தலா -1 ஆகியோருக்கு தொற்று உறுதியானது. இதில், 10 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று உறுதியாகவில்லை.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X