சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டி கடத்த முயற்சி லாரி பறிமுதல்; விசாரணை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 மரம் வெட்டி கடத்த முயற்சி  லாரி பறிமுதல்; விசாரணை

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, அனுமதி இல்லாமல் சில்வர் ஓக் மரம் வெட்டி, கடத்த தயாராக இருந்த லாரியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நீலகிரியில், பட்டா நிலத்தில் மரங்கள் வெட்டுவதாக இருப்பின், சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெறவேண்டும். உரிய அனுமதி பெறாமல், பல இடங்களில் மரங்கள் வெட்டப்படுவது தொடர்கிறது.கோத்தகிரி நெடுகுளா சாலையில், குருக்குத்தி பிரிவில், பட்டா நிலத்தில், சில்வர் ஓக் மரம் வெட்டி, லாரியில் கடத்த தயாராக இருந்தது. அவ்வழியாக சென்ற, கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, லாரியை ஆய்வு செய்து, ஆவணங்களை சரிபார்த்தார்.அப்போது, 'மரம் வெட்ட எந்த அனுமதியும் பெறவில்லை' என தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த அவர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர், லாரி டிரைவர் மணி, 35 என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X