தொற்று அறிகுறி நபர்களுக்கு இனி ஊட்டியில் சிகிச்சை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று அறிகுறி நபர்களுக்கு இனி ஊட்டியில் சிகிச்சை

Added : ஜூன் 26, 2020
Share

ஊட்டி:நீலகிரியில், தொற்று அறிகுறி கண்டறியும் நபர்களுக்கு இனி, ஊட்டியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், தொற்று அறிகுறி கண்டறிந்த நபர்களை சுகாதார துறையினர், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கின்றனர். அங்கு, தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், போதிய இடவசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு கட்டடங்களை தேர்வு செய்து அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால், நீலகிரியில், தொற்று அறிகுறி கண்டறியும் நபர்களை, இம்மாவட்டத்தில் சிகிச்சை அளிக்க சுகாதார துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி, ஊட்டி 'சேட்' மருத்துவமனையை, சுகாதார துறையினர் தேர்வு செய்து, நேற்று முதல் தொற்று நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''தொற்று அறிகுறி கண்டறியும், 60 வயதுக்கு மேல் உள்ள நபர்கள்; கர்ப்பிணிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், நல்ல உடல்நிலை உள்ளவர்களுக்கு, ஊட்டியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X