சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர், போலீசார் உட்பட 33 பேர் கொரோனாவால் பாதிப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

தேனி:தேனிமாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர், போலீசார், பிறந்த குழந்தைகள்உட்பட33பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி அல்லிநகரம் 34 வயது கர்ப்பிணி, அல்லிநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக உள்ள அரண்மனைப்புதுார் முல்லைநகர் 47 வயது ஆண், வடுகபட்டியை சேர்ந்த 45 வயது ஏட்டு, கெங்குவார்பட்டி ஜி.மீனாட்சிபுரம் 34 வயது கிரேடு 1 போலீஸ்காரர், பொம்மையக் கவுண்டன் பட்டி 27 வயது பெண், மதுரையில் இருந்து தேனி திரும்பிய சுப்பன் செட்டி தெரு 32 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

பெரியகுளம் லட்சுமிபுரம் 27 வயது மருந்து விற்பனையாளர், கீழவடகரை பிள்ளையார் கோயில் தெரு 70 வயது முதியவர், அவருடைய 61 வயது மனைவி, 40 வயது மகன், 9 வயது சிறுமி, வடகரை காட்டமேட்டு பள்ளிவாசல் தெரு 33 வயது பெண், வடகரை தெற்கு பூந்தோட்டத் தெரு 9 வயது சிறுவன் பாதிக்கப்பட்டனர்.தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடையின் உரிமையாளர் ஆண்டிபட்டி பெருமாள்கோயில்பட்டி 47 வயது ஆண், மதுரையில் இருந்து தேனி வந்த கண்டமனுார் சமத்துவபுரம் 24 வயது வாலிபர் பாதிக்கப்பட்டனர்.

கடலுாரில் இருந்து தேனி வந்த கம்பம் பள்ளிவாசல் தெரு 29 வயது ஆண், கம்பம்சுப்ரமணியர் கோயில் தெரு 45 வயது ஆண், 20 வயது வாலிபர், மியாகான் தெரு 82 வயது முதியவர், கோம்பை ரோடு 30 வயது ஆண், எல்.எப்.,ரோடு 40 வயது ஆண், வரதராஜபுரம் தனியார் வங்கி 31 வயது ஆண் பணியாளர், சிதம்பரத்தில் இருந்து கூடலுார் திரும்பிய கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த 48 வயது பெண், 26 வயது ஆண், அருணாச்சலபிரதேசத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வழியாக உத்தமபாளையம் வந்த 38 வயது ராணுவவீரர், சமதர்மபுரம் 35 வயது பெண், ஸ்ரீராம்நகர் 60 வயது ஆண், அவரது 28 வயது மகன், போடி முதல்வர் தெரு 21 வயது வாலிபர், ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் 45 வயது உளவுப்பிரிவு போலீஸ் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.


குழந்தைகளுக்கு தொற்று

பெரியகுளம் வைத்தியநாதபுரம், சின்னமனுார் வடக்கு தெருவை சேர்ந்த 44, 28 வயது கர்ப்பிணிகள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் பெண் குழந்தைகள் பிறந்தன. இருகுழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகின. மாவட்டத்தில் மொத்தம் 33 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்குணமாகி7 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X