பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியோடு இணையுமா சங்கராபுரம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 காரைக்குடியோடு இணையுமா சங்கராபுரம்

காரைக்குடி:சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை காரைக்குடி நகராட்சியுடன் இணைக்க வேண்டும்என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அருகில் உள்ள ஊராட்சிகளை ஒன்றிணைக்கும் திட்டம் எட்டு ஆண்டுக்கு முன் உருவானது. இதற்காக நகராட்சி சார்பில் அருகில் உள்ள கிராம ஊராட்சிகளின் பட்டியலை சேகரித்து, அரசுக்கு அனுப்பினர். ஆனால் அத்திட்டம் பல ஆண்டாக கிடப்பில் உள்ளது.

எனவே முதற்கட்டமாக தமிழகத்திலேயே மிகப்பெரிய ஊராட்சியாக உள்ள சங்கராபுரத்தை, காரைக்குடி நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஊராட்சியில், 3ம் நிலை நகராட்சிக்கு இணையாக 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். அரசு மருத்துவமனை, போக்குவரத்து கழகம், ஆவின் நிறுவனம், அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லுாரிகள் இந்த ஊராட்சி எல்கைக்குள் உள்ளன.

இதனால், அரசு ஊழியர்களின் தொழில்வரி, குடிநீர், வீட்டு வரிகள் மூலம் ஆண்டுக்கு பல கோடியை இந்த ஊராட்சி பெரும். இந்த ஊராட்சியை காரைக்குடி நகராட்சியுடன் இணைத்தால் வருவாய் அதிகரிப்பதோடு, பெரும் நகருக்கு இணையான வளர்ச்சி பணிகளை செய்யலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ஆதிஜெகநாதன் கூறியதாவது:காரைக்குடியில் இருக்க வேண்டிய ஏராளமான அரசு அலுவலகங்கள், சங்கராபுரம் ஊராட்சியில் உள்ளன. இந்த ஊராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. ஒரு ஊராட்சி செயலர் மூலம் முறையாக வரி வசூல் பணிகளை செய்ய முடியவில்லை. எனவே நிர்வாக வசதி, வருவாயை பெருக்க, சங்கராபுரத்தை காரைக்குடியுடன் சேர்ப்பதில் தவறில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X