பொது செய்தி

தமிழ்நாடு

காலை 7 முதல் 4 மணி வரை கடைகள் திறக்க அறிவுறுத்தல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

ஊட்டி:'ஊட்டியில், காலை 7:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், நகராட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆணைக்கிணங்க, நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், '26ம் தேதி (இன்று) முதல், காலை, 7:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை கடைகள் திறக்கப்பட வேண்டும். வரும், 30ம் தேதி வரை இந்த நிலையே வியாபாரிகள் தொடர வேண்டும். மாவட்ட நிர்வாகம் விதித்த விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். விதிகள் தவறினால் நடவடிக்கை நிச்சயம். கடைகளில், கட்டாயம் முகக்கவசம்; சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வருவாய் அலுவலர் பால்ராஜ் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா, செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X