பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலைக்குவிதை நேர்த்தி அவசியம் : விவசாய அலுவலர் தகவல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சிவகங்கை::ஆனி, ஆடிப்பட்டத்தில்நிலக்கடலை நடவு செய்யும் விவசாயிகள் விதைநேர்த்தி செய்யுமாறு, விதை பரிசோதனை அலுவலர் சிங்கார லீனா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:நிலக்கடலை நடவு செய்யும் விவசாயிகள் தாங்கள் விதைக்கும் விதைகளை உயிர் உரங்களுடன் நேர்த்தி செய்து விதைத்தால் ரசாயன உர செலவை குறைக்கும். மண்ணின் தன்மை காக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி பெறும்.

ஒரு கிலோ கடலை விதை பருப்புடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிர் கொல்லியை 100 மில்லி ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து இக்கலவையை விதைப்பருப்பில் தடவி பின் நிழலில் உலர்த்தி காய்ந்த பின் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் எக்டேருக்கு தேவையான 125 கிலோ விதையுடன் 600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தை கலந்துபின் விதைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X