சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு: 'சீல்' வைத்த இடத்தில் சோகம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

குன்னுார்:கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், கீழே விழுந்தவரை, தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு துாக்கி செல்வதற்குள், அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.அருவங்காடு உதயம் நகரில், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால், அப்பகுதி 'சீல்' வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று, இப்பகுதியை சேர்ந்த லட்சுமியம்மாள், 67, தவறி விழுந்து காயமடைந்தார்.ஸ்டெரச்சர் இல்லாததாலும், அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்பு கேட் பூட்டப்பட்டதாலும், இவரை தொட்டில் கட்டி, 400 மீ., துாரம் மேடான ஒற்றையடி பாதையில், மக்கள் சிரமத்துடன் சுமந்து சென்றனர்; அதற்குள் அவர் உயிரிழந்தார்.குன்னுார் அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு, அவரின் உடல், வீட்டுக்கு கொண்டு வரப்படாமல், நேரடியாக புதைக்க கூறப்பட்டது. அப்போது, பாதுகாப்பு உடைகள் அணிந்தவர்கள் மூலம் கொண்டு சென்று புதைக்க அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X