சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலத்தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கூடலுார்:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு சென்று வர அனுமதி கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கூடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொருளாளர் மணிகண்டன் தலைமையில், மாவட்ட தலைவர் ஜெயராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் லெனின், சி.ஐ.டி.ஐ., மாவட்ட தலைவர் ஜெயன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏல விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள ஏலத்தோட்டங்களில் ஊரடங்கு காரணமாக பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியுடன் கூடலுார், கம்பம் பகுதியில் இருந்து ஏலத்தோட்டங்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் சென்று வர இரு மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X