''வணக்கமுங்க... ரேஷனில் இலவசமா பொருள் வாங்குனீங்களா?'' கோவையில் மக்களிடம் நேரடியாக கேட்டறிந்த முதல்வர்

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (3)
Advertisement
கோவை:கோவை வந்த முதல்வர்பழனிசாமி, பஸ் ஸ்டாண்ட் சென்று, மக்களை நேரடியாக சந்தித்து, 'கொரோனா' பரவல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, மக்களின் குறைகளையும் நேரடியாக கேட்டறிந்தார்.'கொரோனா' பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் பழனி சாமி, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பல்வேறு திட்டங்களை துவக்கி
 ''வணக்கமுங்க... ரேஷனில் இலவசமா பொருள் வாங்குனீங்களா?'' கோவையில் மக்களிடம் நேரடியாக கேட்டறிந்த முதல்வர்

கோவை:கோவை வந்த முதல்வர்பழனிசாமி, பஸ் ஸ்டாண்ட் சென்று, மக்களை நேரடியாக சந்தித்து, 'கொரோனா' பரவல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, மக்களின் குறைகளையும் நேரடியாக கேட்டறிந்தார்.'கொரோனா' பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.


முதல்வர் பழனி சாமி, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.கூட்டம் முடிந்ததும், காந்திபுரம் நகர பேருந்து நிலையத்துக்கு, முதல்வர் செல்ல இருப்பதாக, தகவல் சொல்லப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். எவருக்குமே என்ன நிகழ்வு நடக்கப் போகிறது என, தெரியவில்லை.பிற்பகல், 3:30 மணி. முதல்வர் பழனிசாமி, டவுன் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தார். அமைச்சர் வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உடன் வந்தனர். இவர்களை தவிர, கட்சியினர் எவரும் இல்லை.மேஜை முன் நின்ற முதல்வர், அமைச்சரை பார்த்து, என்ன நிகழ்வு என்பது போல் பார்த்தார்.
அவர் அருகில் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக, கயிறு கட்டி, போலீசார் பாதுகாப்பு கொடுத்தனர். யாரும் எதிர்பார்க்காத வேளையில், பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நடக்க ஆரம்பித்த முதல்வர், ஒரு பெண் பயணியை பார்த்து, 'வணக்கமுங்க' என்றார். முதல்வரின் உபசரிப்பை எதிர்பார்க்காத அப்பெண் திகைத்து, கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
''ரேஷன் கடையில் மூணு மாசம் இலவசமா பொருள் கொடுத்தோம்; வாங்குனீங்களா; நல்லா இருந்துச்சா,''''அய்யா, ஏன்ட்ட... ரேஷன் கார்டே இல்லீங்க...''''ஏன், இன்னும் கார்டு வாங்காம இருக்கீங்க''''வெளியூர்ல இருந்து வந்திருக்கேன்,''''ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா...''''இருக்குங்க''''இருங்க, கலெக்டரிடம் சொல்றேன்.
ரேஷன் கார்டு கொடுக்கறதுக்கு ஏற்பாடு செய்வாரு,''(அப்போது, கலெக்டர் ராஜாமணி, ஓடோடி வந்தார். அவரிடம், அப்பெண்ணுக்கு ரேஷன் கார்டு வழங்க, முதல்வர் அறிவுரை வழங்கினார்)பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணிடம், ''என்னம்மா, உங்களுக்கு என்ன வேணும்,''''அய்யா, என்னோட புருஷன் விட்டுட்டு போயிட்டாரு. ரெண்டு குழந்தை இருக்கு; கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன்.
கார்ப்பரேஷன்ல துாய்மை பணியாளர் வேலைக்கு எழுதி போட்டேன்; இன்னும் கெடைக்கலீங்க,''சற்று கலங்கிய முதல்வர், ''பரிசீலனை செஞ்சிட்டு இருப்பாங்க; வேலை கெடைச்சிடும்,'' என, நம்பிக்கை வார்த்தைகளை கூறி விட்டு, சற்று நகர்ந்தார்.பாதுகாப்பு வளையத்தை தாண்டி, மக்களை நெருங்கி, முதல்வர் செல்ல ஆரம்பித்ததால், போலீசார் பதைபதைத்தனர்.
நாலாபுறம் ஓடிச் சென்று, சுற்றி சுற்றி நின்று, பாதுகாப்பு கொடுத்தனர்.அதை பொருட்படுத்தாத முதல்வர், அங்கு நின்றிருந்த, உக்கடம் பஸ்சுக்குள் ஏறினார். சற்று தயங்கியபடி, அமைச்சர் வேலுமணி பின்தொடர்ந்தார். இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளிடம், 'முக கவசம் அணியணும்; சமூக இடைவெளி விட்டு நடந்து போங்க; 20 வினாடி கை கழுவணும்' என, அறிவுரை வழங்கினார்.பின், ''பஸ் வசதி போதுமானதா இருக்கா,'' என, ஒரு பயணியிடம் கேட்க, ''அதெல்லாம் பிரச்னையில்லீங்க. பஸ் வருதுங்க,'' என்றதும், கீழிறங்கியவர், எதிரில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்றார்.
துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் வரிசையாக கட்டி, விற்பனைக்கு தொங்க விடப்பட்டிருந்தது. அதைப்பார்த்த முதல்வர், ''என்னப்பா, முக கவசம் எவ்வளவு ரூபா,'' என கேட்டார்.''10 ரூபாய்ங்க,''''ரொம்ப சிறுசா இருக்கே. முக கவசம்ன்னா, மூக்கில் இருந்து (கைகளால் தொட்டுக் காண்பிக்கிறார்), தாடை வரைக்கும் பெருசா இருக்கணும். சிறுசா இருந்தா, இடைவெளியில, கிருமி உள்ளே போயிடும். தரமானதா விக்கணும், சரியா,'' என்றவர், ''யார், என்ன வாங்க வந்தாலும், முக கவசம் போட்டிருக்காங்களான்னு பார்க்கணும்.
இல்லேன்னா, வாங்கி, அணியச் சொல்லுங்க. வர்றவங்களை சமூக இடைவெளி விட்டு, நிற்கச் சொல்லி, பொருள் கொடுக்கணும். வியாபாரம் எப்படி இருக்கு,'' என, கேட்டார்.''கொஞ்சம் டல்லாதாங்க இருக்கு,''''இப்பதானே, பஸ் ஓட ஆரம்பிச்சிருக்கு. போக போக வியாபாரம் நல்லாயிரும்,'' என, நம்பிக்கை வார்த்தை சொல்லி விட்டு, காரில் புறப்பட்டுச் சென்றார்.பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, முதல்வர் மற்றும் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், பயணிகளில் ஒருவர், நம்மிடம் வந்து, ''ஏங்க, சி.எம்., வர்றதா சொல்றாங்க. எப்ப வருவாரு,'' என, கேட்டார்.''என்னங்க, இப்ப, வந்துட்டு போனது, சி.எம்., தாங்க,'' என்றதும், ''அப்டீங்களா,'' என, வாயடைத்து போனார்.
அந்நிமிடம், நமது முதல்வர், எவ்வித பந்தாவும் இன்றி, எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்பதை உணர முடிந்தது!எம்.ஜி.ஆர்., ஸ்டைல்!மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., எந்தவொரு நிகழ்ச்சிக்கு சென்றாலும், பொதுமக்களை சந்தித்து, உரையாடுவது, அவர்களது குறைகளை கேட்டறிந்து, களைவது வழக்கம். அதேபோல், முதல்வர் பழனிசாமி, ஆய்வு கூட்டம் மட்டும் நடத்தி விட்டு, திரும்பிச் செல்லாமல், பஸ் ஸ்டாண்ட் சென்று, மக்களை நேரடியாக சந்தித்து, 'கொரோனா' பரவல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, அவர்களது குறைகளையும் கேட்டு, நம்பிக்கை விதைத்தது, வரவேற்பை பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202007:24:15 IST Report Abuse
ஆப்பு படம் பாக்கெட்டில் பளிச்னு தெரியுதே... சின்னம்மா படமோ?
Rate this:
Cancel
Ramasubramanian Sk - pondicherry,இந்தியா
26-ஜூன்-202007:13:03 IST Report Abuse
Ramasubramanian Sk உண்மையாகவே இவ்வளவு எளிமையான முதல் அமைச்சர் தமிழ் நாட்டிற்கு இப்போது உள்ளது நல்ல விஷயம். பந்தா இல்லாமல் உள்ளார்கள். 2026 வரை இவரே தொடர்ந்து இருப்பார்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-ஜூன்-202004:40:17 IST Report Abuse
Mani . V ஆகஸ்டு 14?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X