பொது செய்தி

தமிழ்நாடு

'கோவையில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது': முதல்வர் பழனிசாமி உறுதி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கோவை:''கோவையில் கொரோனா தொற்று, கட்டுக்குள் இருக்கிறது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்திய முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வைரஸ் தடுப்பு பணியை கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் செய்து வருகிறது. அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றியதால், கோவையில் வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.மாவட்டத்தில், இதுவரை 36 ஆயிரத்து 906 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 292 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டனர். தற்போது சிகிச்சையில் இருப்போர், 112 பேர்; வீடு திரும்பியோர் 178 பேர்.பல்வேறு மாவட்டவங்களை சேர்ந்தவர்கள், ரயில், விமானத்தில் இங்கு வரும்போது பரிசோதிக்கப்படுவதால், எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறைவு தான்.கோவையில் கொரோனா பரிசோதனைக்கு 10 மையங்கள் உள்ளன. தினமும், 2,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. 3,026 படுக்கை வசதி உள்ளது.நொய்யல் புனரமைப்பு திட்டத்துக்கு, 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. டெண்டர் முடிந்து பணிகள் துவங்கப்பட்டு விட்டன.மத்திய அரசிடம் பேசி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வழங்கப்பட்ட கடனுதவியில், 10 சதவீதம் தமிழக தொழில் முனைவோருக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது.இதில் கோவையில் மட்டும், 9,991 தொழில் முனைவோருக்கு, 761 கோடி கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் பழனிசாமி கூறினார்.அத்திக்கடவு 2ம் திட்டம்: அரசு பரிசீலனைமுதல்வர் கூறுகையில், ''விவசாயிகளின், 50 ஆண்டு கால கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டம், 1,652 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021 டிசம்பரில் பணி முடிந்து, திட்டம் பயன்பாட்டுக்கு வந்து விடும். விடுபட்ட பகுதிகளுக்கான இரண்டாம் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இதற்கென விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நபார்டு திட்டத்தில், அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X