பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4,145 கோடி கடன் : முதல்வர் பழனிசாமி தகவல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கோவை;''மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 4,145 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,'' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.கோவையில், மாவட்ட சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், 14 தொழில் அமைப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை முன்வைத்தனர். மூன்று மாதம் மின்கட்டணத்தில் தள்ளுபடி, நடப்பு கணக்கு மட்டும் வைத்துள்ள, நிறுவனங்களுக்கு கொரோனா கால சிறப்பு கடன் உதவி, அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கு, 'தாய்கோ' வங்கி மூலம் கடன் திட்டங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:தொழில் நிறுவனங்களுக்கு பிணையின்றி கடன் வழங்க, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 'தமிழ்நாடு முதலீட்டு கழகம் - கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம்' மார்ச், 31ல் அறிவிக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தில், 1,064 சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு, 125 கோடி ரூபாய் கடன் உதவியாக அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 98 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 4,145 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கடனுதவியில், இந்திய அளவில் 10 சதவீதத்தை பெற்று தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 9,991 தொழில்நிறுவனங்களுக்கு இதுவரை, 761.52 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கோவை அவிநாசி சாலையில், 8.5 கி.மீ., நீளம் கொண்ட மிகப்பெரிய பாலம், 1,627 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து, கோவை, திருப்பூர் பகுதிக்கு தடையில்லா மின்சாரம் முழுமையாக வழங்கவும், துணை நிலையங்கள் நிறுவவும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.விவசாயிகளுடன் சந்திப்புதொழில்துறையினர் கூட்டத்தை தொடர்ந்து, தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் தரப்பில், 15 பிரதிநிதிகள் முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். தென்னை 'நீரா' பான உற்பத்திக்கு உதவி, விவசாய மின் இணைப்பு, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைத்தல், தென்னை நலவாரியம் அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X