பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 7 பேருக்கு தொற்று"  பாதிப்பு 128 ஆக உயர்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தாராபுரம் நகராட்சியின் நான்கு பணியாளர் உட்பட, ஐந்து நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ராஜபாளையம் சென்று வந்த, பாண்டியன் நகரை சேர்ந்த, 41 வயது ஆண்; பள்ளப்பட்டி சென்று வந்த, திருப்பூர் மாநகராட்சியின் நாராயணசாமி நகரை சேர்ந்த, 35 வயதுள்ள ஆண் என, நேற்று ஒரே நாளில், ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உடுமலை அரசு மருத்துவமனை, 'டயாலிஸ்' பிரிவு செவிலியருக்கும், அவிநாசியை சேர்ந்த, 43 வயது ஆண் ஆகியோருக்கும், தொற்று உறுதியாகி உள்ளது. தாராபுரத்தில், மேலும் மூவர் கொரோனா அறிகுறியுடன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 128 ஆக உயர்ந்துள்ளது. 116 பேர் குணமாகிய நிலையில், 11 பேர், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X