பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலுார் மானாவாரி நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலுார் கப்பாமடை, பளியன்குடி, வெட்டுக்காடு பகுதியில் எள், நிலக்கடலை, தட்டாம்பயறு உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன், தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் ரஹீப், வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) மணிகண்டபிரசன்னா, வேளாண்
அலுவலர் மகாவிஷ்ணு ஆகியோர் மானாவாரி நிலங்களுக்கு சென்று விவசாயிகளை
சந்தித்தனர்.

தமிழக மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உழவு செய்ததற்கு ஏக்கருக்கு ரூ.500 வீதம் மானியத் தொகை வழங்கினர். விதை மற்றும் உயிர் உரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. பூஞ்சான கொல்லி மற்றும் உயிர் உரம் விதை நேரத்தி விவசாயிகளுக்கு செய்து காட்டப்பட்டது. உதவி வேளாண் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X