சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய் இறுதி சடங்குக்கு சென்ற மகன் சாலை மறியல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:தாயின் இறுதி சடங்குக்கு சென்ற மகனை, 'இ-பாஸ்' இல்லாததால், நீலகிரி மாவட்ட எல்லையில், அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால், உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவர் கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் தாய் சீதையம்மாள், 78 வசித்து வந்தார். உடல் நலம் பாதித்த இவரது தாய், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு இறந்து விட்டார். இவருடைய உடலை சொந்த ஊரான, தங்காடுக்கு எடுத்துச் செல்ல, ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.மகன் மற்றும் உறவினர்கள் மூன்று கார்களில், உடன் சென்றனர். பர்லியாறில், நீலகிரி மாவட்ட வருவாய்த்துறையினர், தடுத்து நிறுத்தினர். இறப்பு சான்றிதழை காண்பித்தவுடன், ஆம்புலன்ஸ் செல்ல அனுமதித்தனர். 'இ-பாஸ்' இல்லாததால், கார்களை தடுத்து நிறுத்தினர்.''நாங்கள் காலை, 6:00 மணியிலிருந்து 'இ-பாஸ்' விண்ணப்பித்தும், கிடைக்கவில்லை என கூறி, மகன் உட்பட உறவினர், 12 பேர், ஊட்டி சாலையில் மறியல் செய்தனர். அரை மணி நேரத்திற்குப் பின், வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை செல்ல அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X