சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சியில் எஸ்.ஐ., உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், மேலும் ஒரு எஸ்.ஐ., மற்றும் சுகாதார பணியாளர் ஒருவருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், 23 வயது பெண் போலீஸ், காய்ச்சல், சளி காரணமாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். அவருக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவருடன் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியவர்கள், குடியிருப்பில் தங்கியிருந்தோர் உள்பட, 45 பேருக்கு, மாதிரி சேகரிக்கப்பட்டது.இதில், 36 வயது ஆண் எஸ்.ஐ., மற்றும், போலீஸ் ஸ்டேஷனில் சுகாதார பணி செய்யும், 56 வயது பெண்ணுக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி அமர்ஜோதி நகரை சேர்ந்த, 31 வயது இளைஞர் சென்னையில் உள்ள, துணிக்கடையில் பணியாற்றி வந்தார். அவர், ஐந்து நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து வீடு திரும்பினார். பொள்ளாச்சி வந்தவுடன், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யபப்பட்டது.வால்பாறை அடுத்துள்ள தேயிலை எஸ்டேட்டில், 65 வயது முதியவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனையில், தொற்று உறுதியானது. கொரோனா தொற்று பாதித்தவர்கள், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X